மதுரை நகரில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள்:போலீஸார் விசாரணை

மதுரை நகரில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்கள்: போலீஸார் விசாரணை;

Update: 2021-07-05 16:17 GMT

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் கைது

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராசன் குறித்து ,அவதூறாக சமூக வலைதளங்களில் பேசி வீடியோ வெளியிட்டதாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன்ஜி மற்றும் தேவர் மீடியா என்ற யூடிப் பக்க அம்மன் ஆகிய இருவரையும் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் கைது செய்தனர்.

வீட்டை உடைத்து  29 பவுன் நகை  பணம்கொள்ளை  போலீஸ் விசாரணை

மதுரை பத்திர பதிவு அலுவலக அலுவலர் வீட்டை உடைத்து 29 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் ஜவஹர் நகர் ஐந்தாவது ராஜாராம் தெருவில் வசிப்பவர் சேகர் 31.

இவர், மதுரையில்  மஹால் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .

சம்பவத்தன்று, குடும்பத்துடன் சாத்தாங்குடியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 29 சவரன்

தங்க நகைகள், மற்றும் பணம் ரூபாய் 50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மதுரை திருப்பாவையில் நடந்து சென்ற பெண்ணிடம் மூன்று பவுன் தாலி செயின் பறிப்பு:  பைக் ஆசாமிகள் கைவரிசை

மதுரை திருப்பாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தாலி செயின் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.  மதுரை கே. புதூர் ஜி. ஆர். நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சந்திரகலா 48 .

இவர் ,ஜி .ஆர் .நகர் முதல் தெருவில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த பைக் ஆசாமிகள் அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர் . செயின் பறிப்பு தொடர்பாக, சந்திரகலா கொடுத்த புகாரின் பேரில், திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News