மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நிலம் ஒப்படைப்பு; 3 நாட்கள் சிறப்பு முகாம்

மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மக்களுக்கு நிலம் ஒப்படைப்புக்காக 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.;

Update: 2021-08-24 16:31 GMT

வீட்டுவசதி வாரியம் அலுவலகத்தில் விற்பனை ஒப்பந்த பத்திரம் வழங்கும் அதிகாரிகள்.

மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மதுரை தோப்பூர், உச்சப்பட்டி துணைக்கோள் நகரம் பகுதிகளில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு இடத்துக்குரிய விற்பனை ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தோப்பூர், உச்சப்பட்டி, துணைக்கோள் நகரம், போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு, இடம் விற்பனைக்கான ஏலம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் குலுக்கல் மூலம் இடம் கிடைத்தவர்கள் பணம் கட்டி முடித்தவுடன் அவர்களுக்குரிய விற்பனை ஒப்பந்த பத்திரங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டுவசதி வாரியம் அலுவலகத்தில் வைத்து விற்பனை ஒப்பந்த பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஆகஸ்ட் 24, 25, 26, ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் நாளான இன்று 50 பேருக்கு விற்பனை ஒப்பந்த பத்திரங்களை மேற்பார்வை பொறியாளர் தியாகராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் இருளப்பன், மேலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் வழங்கினர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வருவாய் அலுவலர் முகமது இப்ராஹிம், மதுரை வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் கண்ணன், தலைமை நில அளவையாளர் அன்பு கண்ணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News