மதுரை ஒ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மதுரை ஒ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் அரசு விதிகள் பின்பற்றபடுகிறதா என கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்;
தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஒ.சி.பி.எம். பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் நடைபெற்று வருவதை, கலெக்டர் மரு.அனீஷ் சேகர், பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி அனைத்து பள்ளிக் கட்டிட வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 534 பள்ளிகள், மதுரை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத மற்ற பணியாளர்கள் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு, வகுப்பிற்கும் 20 மாணவர்களை கொண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் அறிவுரைகளை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ஆரம்பிக்கும் முதல் வகுப்பிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இடவசதி இல்லாத அரசு பள்ளிகளில் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் மாணவர்களை கொண்டும், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 100 சதவீதம் மாணவர்களை கொண்டும் வகுப்புகள் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை முறையாக கொரோனா பரிசோதனை செய்வதற்கும், கொரோனா இருப்பதாக சந்தேகப்படும் மாணவர்களை தனிமைப் படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.