மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: மர்ம நபருக்கு வலைவீச்சு

மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2021-09-10 17:20 GMT

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சிக்கும் மர்ம நபர்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில், அமைந்துள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக வங்கி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தை பார்க்கும்போது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, அதிகாரிகள் உடனடியாக கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்தனர். அப்போது ஒரு இளைஞர் ஏடிஎம் எந்திரத்தை உடைப்பதும், கண்காணிப்பு கேமராவில் சாயம் பூசி மறைப்பதையும் போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் கொடுத்து மற்றும் சிசிடிவி காட்சிகளையும் கொடுத்தனர். சிசிடிவி காட்சியை ஆய்வ செய்த போலீசார், ஒரு இளைஞர் எந்திரத்தை உடைப்பதும், பணத்தை எடுக்க முடியாமல் தோல்வி அடைந்ததும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News