காப்பகங்கள் திறக்க அரசின் அனுமதி கண்டிப்பாக பெறவேண்டும்: ஆணைய உறுப்பினர் தகவல்:
குழந்தைகள் காப்பகம் தொடங்கும் முன்பு அரசின் அனுமதி கட்டாயம்.
குழந்தைகள் காப்பகம் தொடங்க கட்டாயம் அரசு அனுமதி பெற வேண்டும் என்றார் குழந்தைகள் நல ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ராம்ராஜ்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்துக்கு பிறகு அவர் அளித்த பேட்டி: கிராமம் முதல் நகரம் பேரூராட்சி என பல்வேறு கட்டங்களாக குழுக்கள் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். குழந்தை பாதுகாப்பில் அரசு மட்டுமல்ல பொது மக்களின் பங்கு மிகவும் அவசியம்.
கொரோனா காலத்தில் குழந்தை எதிரான குற்றம் அதிகாரித்துள்ளது. அதனை தடுக்கவேண்டும். அதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்றாம் அலையின் போது, குழந்தையின் மீது தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழகபட்டுள்ளது.
குழந்தை விற்பனை முற்றிலும் ஓழிக்கபட வேண்டும். குழந்தை பாதுகாப்பு உறுதி செய்ய தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மதுரையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கட்டுள்ளது. தத்து எடுப்பில் சிக்கலில்லை சிரமம் இல்லை. கடுமையாக இருக்கும். இல்லையென்றால், குழந்தைகள் மீதான குற்றச் செயல்கள் அதிகரித்து விடும்.இதன் காரண மாகவே, மத்திய அரசு கடுமையான சட்டங்களை வகுத்துள்ளது.
எளிமையாக திருத்தம் செய்ய மாநில அளவில் பரிந்துரை செய்யப்படும். மதுரை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முழுமையாக ஒழிக்கப்படும் எ ன, உறுதி அளிக்கிறேன். 1098 அழைத்தால் ஒரு மணி நேரத்தில் குழந்தைகள் மீட்கப்படுவர். குழந்தைகள் பாதுகாப்பில் மதுரை மாவட்டத்தை முன்மாதிரியான மாவட்டமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என டாக்டர் ராம்ராஜ் தெரிவித்தார்.