மதுரையில் மூத்த பத்திரிக்கையாளரின் நூல் வெளியீட்டு விழா

மதுரையில் மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை, எழுதிய "பெண்ணே பேராற்றல்" புத்தக வெளியீடு நடைபெற்றது.;

Update: 2021-08-28 09:33 GMT

மதுரையில் மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை எழுதிய "பெண்ணே பேராற்றல்" புத்தக வெளியீடு நடைபெற்றது.

மதுரையில் மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை, எழுதிய "பெண்ணே பேராற்றல்" புத்தக வெளியீடு நடைபெற்றது.

எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளையின் செயல் இயக்குநர் ராஜ்குமாரி, புத்தகத்தை வெளியிட, முன்னாள் எம்.எல்.ஏ.யும் மார்க்.கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினருமான பாலபாரதி, பெற்றுக் கொண்டு புத்தகம் குறித்து பேசினார்.

வழக்கறிஞர் செல்வகோமதி (தலைவர், நீதியரசர் சிவராஜ் பாட்டீல் பவுண்டேஷன்) தலைமை வகிக்க, பெண்கள் ஆதார மையத்தின் இயக்குநர் பிம்லா சந்திரசேகர், சிறார் நீதிக்குழும உறுப்பினர் வழக்கறிஞர் பாலசுந்தரி, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் செய்தி ஆசிரியர் பத்மினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திரளான தோழமைகளின் பங்கேற்போடு, எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சி.ஆர்.எஸ்., திட்ட இயக்குநர் ஜனார்த்தன் பாபு மற்றும் மையத்தின் நண்பர்களின் மனமுவந்த ஒத்துழைப்போடு விழா நடைபெற்றது.

Tags:    

Similar News