மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் வைரலாகும் விடியோ

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் வைரலாகும் விடியோ.;

Update: 2021-07-07 16:26 GMT

மதுரை காமராஜபுரம் சின்ன கண்மாய் பகுதிகளில் ரேஷன் கடையில் அரிசியை வாங்கி மொத்தமாக கடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது:

மதுரை காமராஜபுரம் சின்ன கண்மாய் சி.எம்.ஆர்.ரோடு  பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு ரேஷன் கடைகளிலும், காமராஜபுரம் சின்ன கண்மாய் பகுதி மக்கள் ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். இங்கிருந்து ரேஷன் கார்டுகளுக்கு, இலவசமாக அரிசியை வாங்கி செல்லும் மக்களிடம் குறைந்த  விலைக்கு  அரிசியை வாங்கும் வியாபாரிகள்  அதை மூட்டை மூட்டையாக லாரிகளில் கடத்திச்செல்லும் விடியோ காட்சிகள்   சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகளை வைத்து சில்லறையாக கிடைக்கும் அரிசியை வியாபாரிகள் சொற்ப விலை கொடுத்து அவர்களிடமிருந்து வாங்கி அரிசியை மொத்தமாக சேர்த்து வெளி மாநிலங்களுக்குக் கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

மேலும் ரேஷன் கடைகாரர்களிடமும் மறைமுகமாக அரிசியை பெற்று அங்கிருந்து  வேறு இடத்திற்கு கொண்டு சென்று ரேஷன் அரிசியை விற்கிறார்கள் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், எந்த வித பலனும் இல்லை என்பதால்தான் யாரோ ஒருவர் இச்செய்தியை வெளி உலகுக்கு கொண்டு செல்லும் வகையில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags:    

Similar News