மதுரையில் காங்கிரஸ் வார்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது;

Update: 2021-08-01 17:55 GMT

மதுரையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வார்டு தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது 

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் 6-ம் பகுதியில் வார்டு தலைவர்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு, 6-ம் பகுதி தலைவர் பிச்சாலு தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான, நாஞ்சில் கே.ஜி. ரமேஷ் குமார், மாநில பொதுச் செயலாளர் வரதராஜன், மனித உரிமைகள் துறை மாநில பொதுச் செயலாளர், பி.ஜே.காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகியிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வேட்டி , துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், வழக்கறிஞர் அணி மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி , மூவேந்திரன் , செல்வராஜ் , விக்னேஷ் ,ஐ.என்.டி.யு.சி கஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் குறைக்க வேண்டும், தடுப்பூசி தடையின்றி கிடைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News