மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம்: பிரதமர் மோடிக்கு பாராட்டு
முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கிய பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியினர் பாராட்டு :;
மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கே கே சீனிவாசன் தலைமையில், அழகர்கோவில் செல்லும் வழியில் கடச்சநேந்தலில் நடைபெற்றது.
இதில் , பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் எல். முருகன், ராஜ்யாசபா உறுப்பினராக இல்லாவிட்டாலும், மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்கியதையும், புதிய இருபாலர் கல்லூரி தொடங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நிர்வாகிகள் பலரும் தங்கள் பொறுப்பினை உணர்ந்து நம் பகுதியில் கட்சியின் முக்கிய பிரதிநிதியாக தாங்களே இருந்து களப்பணியில் , மகளிர் அணியினருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்பினையும், வர்த்தக பிரிவு நிர்வாகிகள் வர்த்தகர்களை சந்தித்து கட்சியில் தங்கள் பணியினை சிறப்பிக்கு மாறு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன்,மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், அணி பிரிவு, தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.