மதுரை அருகே இளைஞர் குத்திக் கொலை - பரபரப்பு
மதுரையில் நண்பரின் தந்தை தாக்கப்பட்டத்தை தட்டிகேட்ட இளைஞர் குத்திகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், எச். எம். எஸ் காலனி புதுவாழ்வு நகரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசாரி கணேசன் மகன் அருண் பிரகாஷ் என்பவருக்கும், கணேசனுக்கும் இடையே, ஜல்லி மணல் கொட்டியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அருண் பிரகாஷ், காவலாளியை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. காவலாளி கணேசன் இதுதொடர்பாக தனது மகன் கௌதமிடம், செல்போன் மூலம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து கௌதம், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை பார்க்கும் விக்னேஷ் (வயது 22) என்பவர் உள்ளிட்ட சிலருடன் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆவேசமடைந்த அருண் பிரகாஷ், வீட்டில் இருந்த கத்தியால் விக்னேஷை, சரமாரியாக குத்தியதில், அவர் படுகாயம் அடைந்ததார். அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இறந்து விட்டார். இதுகுறித்து, மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அருண்பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.