மதுரை கோயில்களில் ஆவணி பௌர்ணமி பூஜை

மதுரையில் உள்ள கோயில்களில் ஆவணி பௌர்ணமி பூஜைகள் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியோடு பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-08-22 05:31 GMT

மதுரையில் பௌர்ணமியையொட்டி கோயில்களில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், ஆவணி பௌர்ணமியையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள சிவன், மீனாட்சிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெற்றது.

முன்னதாக, சிவன், மீனாட்சிக்கு பால், தயிர், சந்தனம் அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல், மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் ஞானசித்தி விநாயகர், மதுரை சாத்தமங்கலம் பால விநாயகர், மேலமடை மருதுபாண்டியர் தெருவில் அமைந்துள்ள சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர் ஆலயத்திலும், குறைவான பக்தர்களுடன் பௌர்ணமி பூஜைகள் நடைபெற்றது.  முகக்கவசத்துடன், பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News