மதுரையில் தனியார் ஆலயங்களில் புரட்டாசி சனிவார விழா
புரட்டாசி சனிவாரத்தையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.;
மதுரையில் தனியார் ஆலயங்களில் புரட்டாசி சனிவார விழா வழிபாடு
மதுரையில் உள்ள தனியார் ஆலயங்களில் புரட்டாசி சனிவார விழா நடைபெற்றது.
கொரோனா காலம் என்பதால், அரசு ஆலயங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு பூஜைகள் முடித்து நடை சார்த்தப் பட்டுள்ளன. இந்த நிலையில், மதுரை நகரில் உள்ள பல தனியார் பொறுப்பில் உள்ள கோயில்களில், புரட்டாசி சனிவார விழா நடந்தது. இதையொட்டி, மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், உள்ள லெட்சுமி நாராயணர், ஆஞ்சநேயருக்கு பக்தர்களால் சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது. இதேபோல், மதுரை மருதுபாண்டியர் தெருவில் உள்ள சித்திவிநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர் ஆலயத்திலும், புரட்டாசி சனிவாரத்தையொட்டி, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.