மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்

மதுரை பி.பி.குளம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரை மட்டமாக்கினர்

Update: 2021-07-13 13:08 GMT

மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன

மதுரை மீனாட்சிபுரம், வைகை வடகரை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்திருந்த வீடுகள், கடைகளை மதுரை மாநகராட்சி அலுவலர்கள், இயந்திரம் மூலம் அகற்றினர்.பொதுமக்கள் இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினாலும், மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

மதுரை பி.பி.குளம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 581 வீடுகளை இன்று இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்றும் அதே வேளையில், மதுரை நகரில் நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், விரைவில் அகற்ற மதுரை மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News