மதுரை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமை- பிரதோஷ விழா

மதுரை கோயில்களில் நடந்த பிரதோஷ வழிபாடுகளில் , பக்தர்கள் கூட்டம் குறைவு

Update: 2021-08-06 15:12 GMT

மதுரை பகுதி கோயில்களில் பிரதோஷ விழாவில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. 

மதுரை மாவட்டத்தில் பல கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள அழியாபதீஸ்வரன், மீனாட்சிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெற்றது.

மேலும், மதுரை ஆவின் நகர் கோடீஸ்வரன் ஆலயத்திலும், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்தில், அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமிக்கு ஈஸ்வர பட்டர் சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகளும், பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News