மதுரை நகரில் இரண்டு மணி நேரமாக தொடர்ந்து மழை
மதுரை நகரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.;
மதுரை நகரில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தொடர் மழை பெய்தது
மதுரையில்வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது. இந்த மழையானது இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து நீடித்தது. மதுரையில், கோரிப்பாளையம், அண்ணா பஸ் ஸ்டாண்டு, அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், கருப்பாயூரணி, ஓடைப்பட்டி, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
கடந்த நான்கு நாட்களாக, மதுரை நகரில் தினசரி மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது.இன்று, பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவியது.திடீரென, பகல் பொழுதிலே மழை பெய்யத் தொடங்கியது.இதனால் வெப்பம் ஒரளவு தான் தணிந்தது.