பேரிடர் காலத்தில் 15 மாதங்களாக தொடர்ந்து சேவையாற்றும் "முத்துராமன்"
மதுரை அண்ணாநகர் முத்துராமன் 15 மாதங்களாக கொரோனா காலத்தில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்.;
மதுரை நகர் அண்ணாநகர் பகுதிகளில் கடந்த 15 மாதங்களாக கொரோனா காலங்களில் பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து மக்கள் நீதிமையத்தினர் என்று சொன்னால் மிகையாகது. மதுரை அண்ணாநகர் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் கட்டிடப் பணியை மேற்கொண்டு வருகிறார். இவரின் நண்பர்களான, நாகேந்திரன், குணா அலி ஆகியோருடன் இணைந்து, கொரோனா காலத்தில் மக்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதோடு மட்டுமில்லாமல், இவர்கள் சார்ந்துள்ள மக்கள் நீதி மையத்தின் சார்பாக, கபசுர குடிநீர் வழங்குதல், நிவாரணப் பொருட்கள் வழங்குதல், ஆடைகளை வழங்குதல் போன்றவைகளை, இவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை அண்ணாநகர் இந்திரா காலனி பகுதிகளில் பொது மக்களுக்கு காய்கறிகளை, முத்துராமன் தலைமையில், காங்கிரஸ் கட்சி பிரமுகர் சாமிக்காளை வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முத்துராமனை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.