மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை
பலத்த மழையால் மதுரை நகரில் பல தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை அருகே விளாங்குடி, பரவை, செல்லூர், கோரிப்பாளையம், அண்ணாநகர், கருப்பாயூரணி, யாகப்பநகர், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மூன்று தினங்களாக இரவு நேரங்களில், குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. வண்டியூர், பரவை கண்மாய்களில் நீர் நிரம்பியுள்ளன.பலத்த மழையால், மதுரை நகரில் பல தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில், கழிவுநீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது.இப் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை, தூர்வார இப் பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.