பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்தினை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன் மற்றும் பிரேமா ஆனந்தி இருவரும் கூட்டாக தலைமை ஏற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜா ராஜேஸ்வரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
தோழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சோ.நடராஜன், சோலையன், மாரியப்பன், மனோகரன் ஆசிரியர் . காளிராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், 20 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திரளாக பங்கேற்றனர்.