கனமழையால் மேற்கூரை சேதம்: மதுரை ஆதார் மையம் மூடல்

கனமழையில் மேற்கூரை சேதமடைந்து, மதுரை கலெக்டர் அலுவலக ஆதார் மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Update: 2021-10-01 06:45 GMT

மதுரையில் பெய்த கனமழையால்,  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தில், மழையின் காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதனால் தற்காலிகமாக ஊழியர்கள் ஆதார் மையத்தை மூடினர். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் எடுக்க வந்த பொதுமக்கள் , மூடப்பட்டது கண்டு ஏமாற்றமடைந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்,  மழைக்கு இதே கட்டிடம் இடிந்து விழுந்து, பின்னர்,  ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News