மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத உடல்

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-20 11:53 GMT

பைல் படம்.

மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் யாரும் உள்ளே செல்லாத அளவிற்கு சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுரை தெப்பக்குளத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், அங்கு விரைந்த தெப்பக்குளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு பொறுப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மிதந்து கொண்டு இருந்த உடலை மீட்டனர்.

இறந்து கிடந்தவர் யார், எங்கிருந்து வந்தார், கொலையா, தற்கொலையா என்பது குறித்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து, இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News