மதுரை அழகர் கோவிலில் பிராணிகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்

அழகர்கோவிலில் உள்ள யானை, குரங்கு, பசுவுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்;

Update: 2021-06-09 13:37 GMT

அழகர்கோவிலில் உள்ள யானை, குரங்கு, பசுவுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுரை அழகர் கோவிலில் பக்தர்கள் வருகை இல்லாததால், கோவில் யானை மற்றும் மயில்கள் குரங்குகளுக்கு வாடிக்கையாக பக்தர்கள் அளித்து வரும் அரிசி, பருப்பு, திண்பன்டங்கள், உணவு உள்ளிட்டவை கிடைக்கவில்லை.  

இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் சங்கர், சூரியபிரகாஷ் ஆகியோர் தங்கள் சொந்த செலவில் அரிசி, பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை வாங்கி அழகர் கோவில் மலைகளில் இருக்கும் குரங்குகள், மயில்கள், யானை என்று பல்வேறு வாயில்லா உயிர்களின் பசி தீர்க்கும் உன்னத பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இந்த அளப்பரிய பணியை இந்த இக்கட்டான காலகட்டத்தில் செய்து வருகின்றதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News