சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: மகள் சாட்சி

சாத்தான் இரட்டைக் கொலை வழக்கில் இறந்தவரின் மகள் இன்று சாட்சியம்:

Update: 2021-08-11 13:16 GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மகள் பெர்சி இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி கூறினார்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 4ஆம் தேதி ஜெயராஜின் மனைவி செல்வராணி சாட்சியம் அளித்த நிலையில், இன்று ஜெயராஜின் மகள் பெர்சி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இவரது சாட்சியத்தை, முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி பத்மநாபன் பதிவு செய்து கொண்டார்.

Tags:    

Similar News