அலங்காநல்லூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் மூர்த்தி துவக்கிவைப்பு

அலங்காநல்லூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் மூர்த்தி இன்று பாெதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

Update: 2021-08-10 16:57 GMT

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பாரைப்பட்டியில் ஊராட்சி மன்ற கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடுவார்ப்பட்டி மற்றும் பாரைப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் ரூ.25.65 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடுவார்ப்பட்டி மற்றும் பாரைப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் ரூபாய் 25.65 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையிலும், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் முன்னிலையிலும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி,  முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கருணாநிதி ஆட்சி காலத்தில்தான், சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில், ஊர்ச்சேரி முதல் சத்திர வெள்ளாளபட்டி வரை இருந்த கிராம சாலை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தியும், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூரில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய சர்க்கரை ஆலை மூலமாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிலுவை தொகையானது ஒரு வருட காலத்திற்குள் வழங்கியும், சுமார் 110 கோடி மதிப்பில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு சக்கையை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு 2006-2011-ஆம் ஆண்டு ஆட்சிக் காலக்கட்டத்தை விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக விளங்க செய்தார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் அதனை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.

கடந்த 2006-2011-ஆம் ஆண்டு காலத்தில் மாணிக்கம்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டதன் மூலமாக அதிகளவில் தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாடிப்பட்டி தாலுகா நீதிமன்றத்திற்கென தனியாக கட்டடம் கட்டித் தரப்பட்டது. சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 86 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டித்தரப்பட்டது. இதுபோன்று பல்வேறு திட்டப்பணிகள் கடந்த 10 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது, கொரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 45 நாட்களில் கொரோனா இரண்டாவது நோய்த் தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக செயலாற்றி வந்த நிலையில், தற்பொழுது கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் நலனை பாதுகாக்கின்ற வகையில் "மக்களை தேடி மருத்துவம்" என்ற உன்னதமான திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள்.

கடந்த கால ஆட்சியைப் போல் அல்லாமல் குறுகிய காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு மகத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல் அறிக்கையில் சொன்னதையும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றார். அதேபோல், மக்களுக்காக நடத்தக்கூடிய மக்களாட்சியில் எளிமையாக மக்களை அணுகி பல்வேறு திட்டங்களை செய்து கொண்டு இருக்கின்றார். கடந்த மூன்று மாதங்களில் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார் என , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மீனாட்சி அம்மன் நகர், சக்கிலியங்குளம், அங்கயற்கண்ணி காலனி, பஞசவர்ணம் கார்டன், வளர் பொதிகை நகர், சந்தோஷ் நகர், சூர்யா நகர், சுபானி நகர், அல்அமின் நகர், சண்முகா நகர், செல்வி நகர், செந்தில்குமரன் நகர், லலிதா மேன்சன், சர்வேயர் காலனி, பாண்டியன் நகர், பரசுராமன் பட்டி, சிலோன் காலனி, மகாலெட்சுமி நகர், கண்ணனேந்தல் கிராமம், சந்தனம் நகர், பி.வி.கே.ஆர். நகர், ஜி.ஆர்.நகர், அய்யாவுத்தேவர் நகர், சக்தி நகர், சென்ட்ரல் எக்சைஸ் காலனி, ஐயப்பன் நகர், பாரத் நகர், ஆர்.ஆர். நகர், தாகூர் நகர், பொறியாளர் நகர், கவுண்டர் நகர், அலைடு கார்டன், வ.உ.சி.நகர், சண்முகா நகர், விஜய் நகர், மேனேந்தல் மற்றும் பி.கே.பி.சிட்டி உள்ளிட்ட இடங்களில் வணிவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.ஆர்.நகரில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து கொரோனா தடுப்பூசி இருப்பு குறிப்பு கேட்டறிந்து, கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தகவலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் ஒலிபெருக்கி வசதியுடன் விளம்பரப்படுத்தவும், அனைவரையும் தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, சோழவந்தான் சட்டமன்ற தொகுதி, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முடுவார்ப்பட்டி கிராமத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தினையும், பாரைப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூபாய் 22.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தினையும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில், இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) எஸ்.அபிதா ஹனிப், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொளியாளர் இந்துமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.செல்லத்துரை, வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீத கிருஷ்ணன், வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா மற்றும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சு அழகு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News