கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்துக்கு பதிலாக மரங்களை மாற்று இடத்தில் பணியினை, அமைச்சர் பார்வையிட்டார்

நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ளன

Update: 2021-09-22 18:15 GMT

மதுரையில்  முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நூலகம் அமைப்பதற்கு தேர்வு  செய்யப்பட்டுள்ள இடத்தில் உள்ள மரங்களை மாற்று இடத்தில் நடும் பணியினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டார்:

மதுரை மாவட்டத்தில், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி  பெயரில் நினைவு நூலகம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் உள்ள மரங்களை நவீன முறையில் நடும் பணியினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பார்வையிட்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் பெயரில்  நூலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள  இடத்தில் உள்ள 18 மரங்களை வெட்டாமல் வேறு இடத்தில் நட்டு வைத்து பாது காப்பதற்காக நவீன முறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி கொண்டு வந்ததற்கு பிறகு அரசுக்கு பல்வேறு வகையில் வரி வருவாய் குறைந்துள்ளது. கடும் நிதிப் பற்றாக்குறை இருந்தாலும்,தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நிதிநிலை நெருக்கடியிலும் கூட நேற்றைய தினம் உள்ளாட்சித்துறையின் சார்பாக ரூபாய் 1500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் பயன்பெறும் வகையில் அறிவித்துள்ளார்கள்

வணிக நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் வரியை அரசுக்கு முறையாக செலுத்த வேண்டும். கடந்த ஒரு வார காலமாக 103 வணிக நிறுவனங்களில் வணிகவரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபடும் வணிக நிறுவனங்களை கண்டறிந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு உரிமம் இரத்து செய்யப்படும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர, மாநகராட்சி ஆணையாளர் மரு.கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு),மு.பூமிநாதன் (மதுரை தெற்கு),மாவட்ட வருவாய் அலுவலர்கோ.செந்தில்குமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) சுகுமாறன், வட்டாட்சியர்கள்முத்துப்பாண்டியன் (மதுரை தெற்கு),சுரேஷ் (மதுரை வடக்கு) மற்றும்கிருஷ்ணன் (மதுரை மேற்கு) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News