மதுரை நகரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி தட்டுப்பாடு

மதுரை நகரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவிட்- 19 தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

Update: 2021-07-16 17:01 GMT

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பாக இளங்கோ மாநகராட்சி பள்ளியிலும்,

மதுரை மாநகரில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுகாதாரத் துறையினர் சார்பாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று அன்சாரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அப்போது, 44- வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

18-44 வயது வரை உள்ள நபர்களுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை எனவும், தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசிகளும் இருப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி மதுரை அன்சாரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிந்து கொண்டு நின்றதால், அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே, டோக்கன் வாங்கியவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், தடுப்பூசி இருப்பு குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

Tags:    

Similar News