மதுரையில் வைகை நதியில் கழிவு நீர் கலப்பது விரைவில் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர்.
வைகை வடகரை பகுதியில், புதைசாக்கடைத் திட்டப் பணியும், தென்கரை பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளும் முடிவுற்றதும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு விடும்.;
வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பது விரைவில் தடுத்து நிறுத்தப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்
மதுரையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை மாநகராட்சி வைகை வடகரை பகுதி, செல்லூர் பகுதி, குலமங்கலம் பகுதி, பந்தல்குடி கால்வாய், மதிச்சியம் பகுதி, தென்கரை பகுதி, பேச்சியம்மன் படித்துறை பகுதி, இஸ்மாயில் புரம் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது, வைகை ஆற்று நீருடன் கலக்கிறது.
இது மட்டுமல்லாமல், வைகை நதியின் மேல்புறம் கலக்கும் கழிவு நீரும், வைகை நதியின் நகர் பகுதியை கடந்து செல்கிறது.
மதுரை நகரில் வைகை வடகரை பகுதியில், புதைசாக்கடைத்த்திட்டப் பணியும், தென்கரை பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பணிகள் நடைபெற்று வருவதால், பணி முடிவுற்றதும் புதை சாக்கடை குழாயகளில் இணைப்புக்கொடுத்தவுடன் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு விடும். பந்தல்குடி கால்வாயில் வரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, வைகை ஆற்றில் விடப்படுகிறது என்றார் அவர்.