மதுரை மாநகராட்சி சார்பில் வாழ்க வரியாளர் சிறப்பு முகாம்

மதுரை மாநகராட்சி சார்பில் 4 நாட்கள் சிறப்பு முகாம்: ஆணையாளர்தகவல் தெரிவித்துள்ளார்;

Update: 2021-07-11 14:18 GMT

மதுரை மாநகராட்சியின் சார்பில் அணைத்து மண்டலங்களிலிலும் 100- வார்டுகளுக்கான வாழ்க வரியாளர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் ஜூலை 13 முதல் 16 வரை நடைபெறுகிறது.

இது குறித்து, மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் சார்பில் மண்டலம் வாரியாக இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமானது, வருகின்ற 13-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது.

மண்டல வாரியாக காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள், புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், வாரிசு அடிப்படையில் பெயர் மாற்றம், உயில் அடிப்படையில் பெயர் மாற்றம், காலிமனை வரி ஆகிய பணிகளுக்கு அதற்குரிய படிவத்தினை வாங்கி பூர்த்தி செய்து, ஆவணங்களை இணைத்து அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பத்தை அளித்து பயன் பெறலாம் என்றார் அவர்..

Tags:    

Similar News