குளிக்கச் சென்றபோது நேர்ந்த பரிதாபம்: மதுரை அருகே கால்வாயில் மூழ்கி 3இளைஞர்கள் பலி

மதுரை அருகே துக்களபட்டி பெரியாறு பிரதானக் கால்வாயில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

Update: 2021-08-16 05:00 GMT

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட துக்களாப்பட்டி என்ற இடத்தில் பெரியாறு பாசன கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்களில் மதுரை முனிச்சாலை சேர்ந்த சகோதரரான கிஷோர் ,கோபி மற்றும் ஹரி உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி நீச்சல் தெரியாததால் பரிதாபமாக உயிரிழந்தனர். பத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் அந்த பகுதியில் குளிக்க வந்தனர். அதில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்களாபட்டியில் இயங்கி வந்த நீர்மின் நிலையம் கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. நீர் மின் நிலையத்திற்காக பாசன கால்வாய் ஆழமாக இருந்தது. அந்த பகுதியில் பகுதியில் சகதி உள்ளிட்டவை நிறைந்திருந்தது. இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகி அவரது உடலை எடுப்பது சற்று காலதாமதம் ஆனது.


நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் இளைஞர்களில் சடலத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக எச்சரிக்கை போர்டு வைத்திருந்தும், மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த வாய்க்கால் பகுதியில் வாரம்தோறும் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்து கும்மாளம் இடுவதும் தொடர்கதையாகி வருவதாகவும், மேலும் அறைகுறை ஆடையுடன் இவர்கள் குளிக்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் விவசாய பணிகளுக்குச் செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் சூழல் நிலவுவதாகவும் அந்த பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், முழுவதுமாக இந்த ஆழமான வாய்க்கால் பகுதியில் குளிப்பதற்கு தடை விதித்து காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Tags:    

Similar News