மதுரை மாவட்டத்தில் இடி மின்னலுடன்பலத்த மழை..!
மதுரை மாவட்டத்தில் இரவில் பலத்த மழை.
மதுரையில் மாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி , மின்னலுடன், மழை பெய்தது. மாலை 6 மணிக்கு துவங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மதுரை மாட்டுத்தாவணி, சிம்மக்கல், பெரியார் நிலையம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால், சாலைகளில் பல இடங்களில் வெள்ள நீர் போல மழை நீர் ஓடியது. ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இதே போல, புற நகர் பகுதியான வாடிப்பட்டியில் மாலை 6 மணிக்கு இடி மின்னலுடன் துவங்கிய கனமழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வருகிறது. மழையின் காரணமாக வாடிப்பட்டி முழுவதும் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி உள்ளது. விவசாய வேலைகள் நடந்து வரும் நிலையில் இந்த கனமழை விவசாய பணிகளை வெகுவாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த மழையின் காரணமாக வயல்வெளிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றமும் விதைக்கப்பட்டுள்ள நெல்லில் முளைவிட்டு இருக்கும் நாற்றுகளை காப்பாற்றவும் விவசாயிகள் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த கனமழை தொடரும் பட்சத்தில் விவசாய பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.