விஜயகாந்த் பிறந்தநாள்: மதுரையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது;
மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வி.பி.ஆர். செல்வகுமார் தலைமையில், மதுரை கே.புதூர் டி.ஆர்.ஒ. காலனியில் உள்ள, மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தேமுதிக கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருகின்ற ஆகஸ்ட்- 25 விஜயகாந்த் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது . வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பது . அனாதை இல்ல குழந்தைகளுக்கு உணவு அளிப்பது கொடுப்பது. அதிகமான பகுதிகளில் கொடியேற்று விழாக்கள் சிறப்பாக் நடத்தவேண்டும். கட்சி பணிகளை சிறப்பாக அனைவரும் செயலாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.