அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை ஏற்க இயலாது: மதுரை உயர்நீதிமன்றம்
வழக்குப் பதியப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், காவல் ஆய்வாளரை இன்னும் கைது செய்யாதது ஏன்? நீதிபதிகள் கேள்வி
அரசு பணியாளர்கள் முறைகேடுகளில், ஈடுபடுவதை ஏற்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. வழக்குப் பதியப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், காவல் ஆய்வாளரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோல, தாமதப்படுத்துவது மனுதாரருக்கு சாதகமாக அமைந்துவிடாதா? என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற செயல்களால் பொதுமக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை குறைந்துவிடும் என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
காவல் ஆய்வாளர் வசந்தி, ஓட்டுநர் ஆகியோரை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் கூலி தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் ஆய்வாளர் வசந்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆய்வாளர் வசந்திக்கு எதிரான ஆவணங்களை முறையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.