மதுரை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட அரும்பனூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது

Update: 2021-09-24 14:00 GMT

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட அரும்பனூர் கிராமத்தில் நேரடி நெல்நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் பி.மூர்த்தி. 

மதுரை அருகே  நேரடி கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து  வைத்தார்:

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரும்பனூர் கிராமத்தில்  மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில்,  சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில்,  நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். மேலும், கருணை அடிப்படையில், விற்பனையாளர் பணிக்கான, பணி நியமன ஆணையை வழங்கினார். தொடர்ந்து ,மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

Tags:    

Similar News