மதுரை அருகே கொரோனா தடுப்பூசி முகாமை, அமைச்சர் தொடங்கி வைப்பு:

மதுரை கிழக்கு தொகுதியில் கோவிட் தடுப்பூசி முகாம்: அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கி வைப்பு;

Update: 2021-07-03 14:10 GMT

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மேற்கு ஊராட்சி ஒன்றியம் உசிலம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கி வைத்தார்.

ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி நியாயாதிபதி, துணை தலைவர் முத்துலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி கார்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டாட்சியர் முத்துவிஜயகுமார், ஒன்றியக்குழு தலைவர் வீரராகவன், துணைத்தலைவர் கார்த்திக்ராஜா, மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக  சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புகள் கண்டறியப்பட்ட  பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதைபோல , மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட சுந்தரராஜன்பட்டி கிராமத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமையும் அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கி வைத்தார்.

Tags:    

Similar News