மதுரை மாநகராட்சி காய்ச்சல் பரிசோதனை முகாமில் ஆணையர் ஆய்வு

மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் முகாமில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-20 13:02 GMT

பைல் படம்.

மதுரை மாநகராட்சி சார்பில் மதுரை நகரில் 178 இடங்களில் தினசரி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. மதுரையில் 31 மாநகராட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை, புதூர் மற்றும் செல்லூரில் நடந்த முகாமை, மதுரை மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் கார்த்திகேயன் திடீரென ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் கூறியதாவது: மதுரை நகரில் தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் 178 இடங்களில் நடத்தப்படுவதால், தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்படுவதால், நோயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றார்.

ஆய்வின்போது, மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் குமரகுருபரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News