பணி முடித்த பணிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யக்கோரிக்கை: ஒப்பந்தகாரர்கள் ஆர்ப்பாட்டம்
பணி முடித்த பணிகளுக்கு பணம் வழங்கக் கோரி, மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்;
பணி முடித்ததற்கான நிலுவைத் தொகையை வழங்ககோரி மாநகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
மாநகராட்சியில் பணியாற்றிய, ஒப்பந்த பணிக்காக நிலுவையில் உள்ள 36- கோடி பாக்கி பணத்தை தர வேண்டியும், மாநகராட்சி வளாகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ராஜூ, செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சரவணன் மற்றும் அனைத்து ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர், ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.