மதுரையில் காப்பகங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு..
மதுரையில் உள்ள காப்பகங்களில், மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.
மதுரையில் உள்ள காப்பகங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளை என்ற காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள் பெற்றோருக்கு தெரியாமல் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்ததாக பெற்றோரை நம்ப வைத்து குழந்தையை விற்றதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் 2 குழந்தைகளை மீட்டனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்து பெற்றோருக்கு தெரியாமல் குழந்தை விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது . இதனால் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் , இதுபோன்று ஆதரவற்றோர், மற்றும் முதியோர் இல்லங்களில் முறையாக குழந்தைகள் விற்பனை மற்றும் முறைகேடுகள் நடக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர் .
இதில், நேற்று விராட்டிபத்து பகுதியில் இரண்டு முதியோர் இல்லங்கள் எவ்வித அனுமதியும் இன்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
இதனையடுத்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் . அனீஸ்சேகர் மதுரையில் விஸ்வநாதபுரம், அண்ணா நகர், டோக் நகர், கோச்சடை போன்ற இடங்களில் உள்ள பல தனியார் முதியோர் காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு செய்தார்.
இதில் காப்பகங்களில் உள்ள முதியவர்களுக்கு குறைகள் எதுவும் உள்ளனவா , உணவு முறையாக வழங்கப் படுகிறதா என விசாரணை நடத்தினார். அதேபோல, ஆதரவற்ற குழந்தைகளிடமும் காப்பகங்களில் தொந்தரவுகள் எதுவும் உள்ளதா எனவும் விசாரித்தார்.
மேலும் ,அங்குள்ள பதிவேடுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.