மதுரை கிழக்கு தொகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் தொடங்கி வைப்பு
மதுரை கிழக்கு தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.
முன்னதாக, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கோழிக்குடி, இளமனூர், புவனேஸ்வரி காலனி, எம்.ஜி.ஆர். சிலை, எ.டி. காலனி, சக்கிமங்கலம் பள்ளிவாசலர், இந்திரா நகர், சௌராட்ரா காலனி, உடன்குண்டு, சந்தனபுரம், கார்சேரி, மேலக் கார்சேரி, வடக்கு சக்குடி, மேல சக்குடி மற்றும் உள்ளிட்ட கிராமங்களில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
மேலசக்குடி கிராமத்தில், மாநில நிதி குழு மானியம் (மாவட்ட ஊராட்சி) திட்டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் தானிய கிட்டங்கியையும், சக்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊதிய திட்டத்தின் கீழ் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும், சக்கிமங்கலம் கிராமத்தில், ஊரக பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.15.47 இலட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி கூடுதல் கட்டடத்தையும், ஜல் ஜீவன் மின் திட்டத்தின் கீழ் ரூ.25.72 இலட்சம் மதிப்பீட்டில் 313 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தையும், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறு பாலத்தினையும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மதுரை கிழக்கு வட்டாட்சியர் பாண்டி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சூரியகலா, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மணிமேகலை, மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சோனா பாய்உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.