மதுரை அருகே சமுதாய வளைகாப்பு: அமைச்சர் தொடங்கி வைப்பு

மதுரை அருகே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்;

Update: 2021-09-25 09:41 GMT

மதுரை அருகே உள்ள பி.ஆர் மஹாலில் சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி.

மதுரை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.ஆர் மஹாலில் சமுதாய வளைகாப்பு விழாவினை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்ததார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, தமிழ்நாடு முதலமைச்சர், முயற்சியினால் தமிழகமெங்கும் சமூக நலத்துறையின் மூலமாக கர்ப்பினி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் 5 வகையான ஊட்டச் சத்துக்கள் அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

நெல் கொள்முதலை பொறுத்த வரையில் கிராம நிர்வாக அலவலர்களின் மூலமாக விவசாயிகள் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கலை ஆய்வு செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை கூட்டுறவுத் துறை மூலமாகவும் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாகவும் வாங்குவதற்கு அரசு தயாராக உள்ளது.

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.6 கோடி மதிப்பிலான சோலார் பேனல்களை ஏற்றி வந்த லாரிக்கு ரூ.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 103 ஜவளிக் கடைகளில் தொடர்ந்து, வணிகவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வுகள் முடிவடைந்த பின்பு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். நேற்றைய தினம் வணிகவரித்துறை சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று வரி ஏய்ப்பு செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

10 வருடங்களுக்கு மேலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வணிகவரித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

மேலும், அபராதம் செலுத்திய பின்பு உரிமத்தை புதுப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக, விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கு அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தடுப்பூசியின் இருப்புக்கு ஏற்றவாறு வாரந்தோறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

மதுரை வண்டியூர் கண்மாயில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து இடையூறை தவிர்க்க பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி, சூரியகலா, திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் எப்.ஹெலன் ரோஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News