திட்ட அனுமதி மற்றும் நகரமைப்பு தொடர்பான சிறப்பு முகாம்: மதுரை மாநகராட்சி ஆணையர் தகவல்

27.07.2021 (செவ்வாய்க்கிழமை) முதல் 30.07.2021 (வெள்ளிக்கிழமை) வரை கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.;

Update: 2021-07-23 10:17 GMT


"நல்லதொரு நகரமைப்பு" திட்ட அனுமதி மற்றும் நகரமைப்பு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தகவல் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் (1 முதல் 100 வார்டுகள்) உள்ள வரைபட அனுமதி, லேஅவுட் அனுமதிக்கான கட்டணம் செலுத்துதல், தனித்த மனை வரன்முறை செய்தல், சாலை பராமரிப்பு சான்று, உள்ளிட்ட நகரமைப்பு மற்றும் திட்ட அனுமதி தொடர்பாக, மாநகராட்சி வழங்கும் அனைத்து சேவைகளுக்கான "நல்லதொரு நகரமைப்பு" சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

அதன்படி,  வரும் 27.07.2021 (செவ்வாய்க்கிழமை) முதல் 30.07.2021 (வெள்ளிக்கிழமை) வரை ஆகிய நான்கு நாட்களில் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மண்டலம் எண்.1க்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஆரப்பாளையம் கிராஸ்ரோட்டில் உள்ள வெள்ளி வீதியார் பெண்கள் மேனிலைப்பள்ளிலும்,

மண்டலம் எண்.2க்கு உட்பட்ட பகுதிகளுக்கு கே.கே.நகரில் உள்ள வக்புவாரிய கல்லூரியிலும்,

மண்டலம் எண்.3-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,

மண்டலம் எண்.4க்கு உட்பட்ட பகுதிகளுக்கு வடக்கு வெளி வீதியில் உள்ள சேதுபதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது. 

இம் முகாமில், பங்கு பெறுபவர்கள், தங்கள் இடத்திற்கான அனைத்து ஆவணங்கள் மற்றும் உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து நடவடிக்கைகளும் தேவைக்கு ஏற்ப கள ஆய்வு செய்து உரிய காலவரம்புக்குள் உத்தரவுகள் வழங்கப்படும் என ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தகவல் தெரிவித்தார்.


Tags:    

Similar News