மின்மாற்றியில் போதையில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி சாவு
மது போதையில் இருந்த ஈஸ்வரன், அந்தப்பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார்;
விருதுநகர் அருகே போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அத்திக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (22). கூலி தொழிலாளியான இவருக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் மது போதையில் இருந்த ஈஸ்வரன், அந்தப்பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார் . அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள், கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ஈஸ்வரன் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.