மதுரை கூர்நோக்கு இல்லத்தில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
இந்தப் பணியிடத்தை முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மதுரை கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
இப்பணியிடத்திற்கு, விண்ணப்பிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் 30-வயது பூாத்தியடைந்த வராகவும் இருத்தல் வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவத்தை madurai.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கண்காணிப்பாளர், அரசினர் கூர்நோக்கு இல்லம், 164, காமராஜர் சாலை, சந்தைபேட்டை, மதுரை-09 என்ற முகவரிக்கு 31.05.2023 மாலை 5.30 மணிக்குள் கிடைத்திடும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.