மதுரை அண்ணாநகரில் மிக மோசமான சாலைகளால் அவதியுறும் மக்கள்..!
மதுரை அண்ணா நகரில் மோசமான சாலையால் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்..
மதுரை:
மதுரை அண்ணாநகர் மெயின் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் இடறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது.மதுரை அண்ணாநகர் சாலை வழியாகத் தான், வண்டியூர், தெப்பக்குளம், கோமதி புரம், யாகப்பநகர், ஜூபிலி டவுன் ஆகிய பகுதிகளுக்கு இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் செல்லக்கூடிய பாதையாக உள்ளது.
மேலும், மாட்டுத்தாவணிக்கு செல்ல மாற்று வழியாகவும் உள்ளது.மதுரை மாநகராட்சி குடிநீர் பணிக்காக இந்த சாலை தோண்டப்பட்டு, குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மதுரையில் இதே போல பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம் அருகே கோமதிபுரம் செல்லும் சாலையானது, வாகனங்கள் செல்ல முடியாதபடி பள்ளமாக இருக்கிறது. இச் சாலையில், இரவு நேரங்களில், செல்வோர் கீழே தவறி விழும் நிலை ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். மேலும் மழை பெய்து வருவதால் அந்த பள்ளத்தில் நீர் தேங்கி நின்று பள்ளம் தெரியாமல் மூடுகிறது. புதிதாக அந்த சாலியல் வருவோர் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழ் விழுகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இச் சாலையை செப்பனிட, மதுரை மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையை சீரமைக்க கோரி, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு, இப் பகுதி மக்கள் கொண்டு. சென்றுள்ளதாக, மக்கள் நீதி மைய நிர்வாகியும், சமூக ஆர்வலர் அண்ணாநகர் முத்துராமன் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் அண்ணாநகர் சாலையை விரைந்து சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.