மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேயர் பாராட்டு..!
உலக ரோபோ ஒலிம்பியாட் அமைப்பினர் நடத்திய தேசிய அளவிலான போட்டியில் வெண்கலம் வென்ற மாணவன் மற்றும் மாணவிக்கு மேயர் பாராட்டு தெரிவித்தார்.
உலக ரோபோ ஒலிம்பியாட் அமைப்பினர் நடத்திய தேசிய அளவிலான போட்டியில் வெண்கலம் வென்ற மாணவன் மற்றும் மாணவிக்கு மேயர் பாராட்டு தெரிவித்தார்.
மதுரை.
உலக ரோபோ ஒலிம்பியாட் 2024 (World Robotic Olympiad 2024) தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பத்தகம் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேயர் இந்திராணிபொன்வசந்த் பாராட்டு தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உலக ரோபோ ஒலிம்பியாட் 2024 தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் மேயர் இந்திராணி பொன்வசந்த், நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். உலக ரோபோ ஒலிம்பியாட் 2024 என்பது இந்தியா STEM அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச அளவில் புகழ்பெற்ற STEM மற்றும் ரோபோட்டிக்ஸ் போட்டியாகும்.
உலக ரோபோ ஒலிம்பியாட் 2024 என்ற அமைப்பின் சார்பாக பசுமை நகரம் என்ற நோக்கத்தில் காற்று மாசுகளை குறைக்கும் வகையில் நடத்தப்பட்ட உலக ரோபோ ஒலிம்பியாட் 2024, இது மக்களுக்கு தோட்டத்தை மற்றும் அடுக்குமாடி வீடுகளுக்கான புதிய பசுமையான பகுதிகளை உருவாக்க உதவுகிறது, மின் சார்ஜிங் மற்றும் இணைப்பு மூலம் கடல் கேபிள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்சார பைக் போன்ற நவீன தொழிநுட்ப பணிகளை செய்யும் ரோபோவை இந்த ஆண்டு எங்கள் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
பல்வேறு பின்னணியில் இருந்து வரும் போட்டியாளர் களுக்கு மத்தியில் மாநகராட்சி மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியிலிருந்து பங்கேற்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.
சென்னையில் ஜூலை மாதம் நடைபெற்ற புகழ்பெற்ற உலக ரோபோ ஒலிம்பியாட் 2024 மண்டல அளவிலான போட்டியில் மதுரை மாநகராட்சி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஸ்ரீ குமரன், வெள்ளிவீதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனா, பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி ரூபிகா ஆகிய மூன்று மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வானார்கள்.
தேசிய அளவிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 6 மற்றும் 7 நடைபெற்ற போட்டியில் ரோபோமிஷன் ஜூனியர் பிரிவில் 50 மற்ற அணிகளுடன் போட்டியிட்டு மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் வெண்கல பதக்கம் பெற்றனர். வெண்கல பதக்கம் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை மாண்புமிகு மேயர் அவர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில், கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர்கள் கௌசல்யா, முத்துமீனாட்சி,சரண், திவ்யா, இசை கவிபிரியா, ஹெச்சி.எல். ஒருங்கிணைப்பாளர் ராஜலெட்சுமி உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.