பெண்கள் வீட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்

பெண்கள் வீட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைக்க வேண்டும்;

Update: 2023-10-07 09:45 GMT

கணினி பயிற்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.

பெண்கள் வீட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் சமயநல்லூர் பேரூராட்சி தலைவர் கலா மீனா ராஜா.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை சத்யமூர்த்தி நகரில் மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல் பவுண்டேசன், பெட்கிராட் இணை ந்து 45 நாட்கள் நடத்திய கணினி பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா தலைமை வகித்து பேசியதாவது: \

பொதுவாக தற்போது பெண்கள் அனைத்து துறையிலும் தடம் பதித்து சாதனைகள் பல நிகழ்த்தி வருகிறார்கள். அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற காலம் போய், பெண்கள் வீட்டின் கண்களாக பார்க்கப்படுகிறார்கள்.

பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி வீட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைக்க வேண்டும். அறிவின் வளர்ச்சி அறிவியல் வளர்ச்சியாய் இன்று எண்ணில்லா சாதனைகள் பல படைக்க உதவி வருகிறது.அந்த வரிசையில் ஏழை எளிய பள்ளி கல்லூரி மாணவிகள் வாழ்வில் உயர வேண்டும் என்பதற்காக வாழ்வாதாரத்துக்கு வழி செய்யும் நோக்கத்தில் மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல். அறக்கட்டளையும் மதுரை பெட்ராட் நிறுவனமும் இணைந்து 45 நாட்கள் கணினி பயிற்சி வழங்கி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்கள். இந்த சான்றிதழ் அரசு பணிக்கும், சுய தொழில் தொடங்கவும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பெட் கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், அறக்கட்டளை சமூக பொறுப்பு அலுவலர் சுஜின்தர்ம ராஜ், பொருளாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். அறக்கட்டளை துணை பொதுமேலாளர் எம்.கே. அசோக்குமார் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் ,பயிற்சியாளர்கள் கீர்த்தி ராஜ், ஷிபாஉட்பட மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் நன்றி கூறினார்.

Tags:    

Similar News