மதுரையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேர் கைது
மதுரையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலம் எச்சத்தை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலம் எச்சம் பறிமுதல். 3 பேர் கைது.
மதுரை மாநகர் தெற்கு வாசல் பகுதியில் உள்ள நகைக்கடை பட்டறையில் சிலர் அரிய வகை விலங்கினமான திமிங்கலத்தின் எச்சத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும், வன உயிரின சரக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அந்த பகுதியை நகை பட்டறை நடத்தி வந்த ராஜாராம், சுந்தரபாண்டி மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த கவி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 11 கிலோ திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.