வஉசி நினைவு நாள்: உருவச்சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 85 வது நினைவு நாளை முன்னிட்டு பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது;
மதுரை சிம்மக்கல்லில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்த மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள்
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வ.உ.சி. உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா சார்பில் அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்டம் சார்பில் இன்று வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 85 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று காலையில் மதுரை சிம்மக்கல்லில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.