மதுரை ராமகிருஷ்ணா மடத்தில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
Vivekanandar Jayanthi Function மதுரையில், விவேகானந்தர் பிறந்தநாளை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளபடி தேசிய இளைஞர் தினமாக ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது .;
Vivekanandar Jayanthi Function
மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள ரிசர்வ்லயன் பகுதியில், ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம்: என்று, மத்திய அரசு 1985-ஆம் ஆண்டு அறிவித்தது. அது முதல் கடந்த 38 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் என்று,இந்தியா முழுவதும் உள்ள பல அமைப்புகள் கொண்டாடி வருகின்றனர்.
விழாவில், ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் ஆசி உரை வழங்கினார்.சுவாமி அர்கபிரபானந்தா சிறப்புரையும் நிகழ்த்தினார். சிறப்பு பேச்சாளர்கள் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் மாணவர்களுக்கு போதனைகளை எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் சுவாமி அர்கபிரபானந்தாகூறியது:
Vivekanandar Jayanthi Function
மதுரையில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள்.
சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம்என்று, மத்திய அரசு அறிவித்தது.அது முதல் கடந்த 38 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் நடைபெற்று வருகிறது
தேசிய இளைஞர் தின நிகழ்ச்சியில், பங்கேற்க 11பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அழைக்கப்பட்டன. இதில், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 1300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மதுரை சிம்மக்கல்லை சார்ந்த சாரதா வித்யாவனம், மாணவிகள், சுவாமி விவேகானந்தர் பற்றிய பாடல்களை பாடினர். பங்கேற்ற மாணவர்கள் மாணவியர்கள் அனைவருக்கும் “எனது பாரதம் அமர பாரதம் ” என்ற சுவாமி விவேகானந்தர் நூல் அனைவருக்கும் வழங்கக்கப்பட்டது.