மதுரையில் பறிமுதல் வாகனங்கள் ரூ.1.46 லட்சத்துக்கு ஏலம்: எஸ்.பி. தகவல்

மதுரையில் பறிமுதல் வாகனங்கள் ரூ.1.46 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-05 08:05 GMT

ஏலம் விடப்பட்ட வாகனங்கள்.

மதுரை மாவட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.1.46 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் கூறுகையில், மதுரை மாவட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு யாரும் உரிமை கோரப்படாத 1019 வாகனங்கள் ரூ.52,97,462/-க்கும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 394 வாகனங்கள் ரூ.72,85,330/-க்கு ஏலம் விடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட 73 காவல் வாகனங்கள் ரூ. 20,19,590/-க்கு ஏலம் விடப்பட்டு ஆக மொத்தம் ஏலம் விட்ட வாகனங்களின் மூலம் ரூ.1,46,02,382/-னை ( ஒரு கோடியே நாற்பத்தி ஆறு லட்சத்து இரண்டாயிரத்து முன்னூற்று என்பத்திரெண்டு ) மட்டும் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News