மதுரை வீரமகாகாளியம்மன் விழாவில் பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு
மதுரை வீரமகாகாளியம்மன் கோவில் விழாவில் பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.;
பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
மதுரை ஜெயந்திபுரம் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனிப் பெருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவ்வகையில், பறவை காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
முன்னதாக, பங்குனித் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பலர், பால்க் குடம், அக்கினிச்சட்டி எடுத்து வந்து வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.