சோழவந்தானில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சோழவந்தானில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-09-02 11:49 GMT

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நடுநிலைப் பள்ளியில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் தலைமை தாங்கினார். முகாமை, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பசும்பொன் மாறன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

சோழவந்தான் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் 9-வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2 வார்டு கவுன்சிலர் கொத்தாலம் செந்தில் வரவேற்புரை ஆற்றினார்.

இதில், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்து செல்வி, சதீஷ், செல்வராணி, குருசாமி, சிவா நிஷா கௌதமராஜா மற்றும் மேலக்கால், கச்சை கட்டி, மன்னாடி மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இலவச கிப்ட் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. முகாமில், பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் இதய நோய் தொழுநோய் மற்றும் கண் நோய் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டதன.

இதனைத்தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆலோசனைகள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News